இலங்கை செய்தி

‘இராஜதந்திர சேவை’ – ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு உயர்குழு ஒப்புதல்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட  தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10  பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு நியமிக்கப்படும் நபர்களின் தகைமைகளை பரிசோதிக்கும் இக்குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, அவர்கள் தத்தமது இராஜதந்திரப் பணிகளைப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் பதவிகள் குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

1.  தர்ஷன எம். பெரேரா – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.

2.  டி.எம்.எஸ்.பி. தசநாயக்க – ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி (ஏற்கனவே பதவியேற்றுள்ளார்).

3. தயானி மென்டிஸ் – ஓஸ்திரியாவுக்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.

4.  எஸ்.பி.டபிள்யூ. பத்திரண – ரூமேனியாவுக்கான இலங்கையின் தூதுவர் (ஏற்கனவே பதவியேற்றுள்ளார்).

5.  என்.ஐ.டி. பரணவிதான – எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.

6.  எஸ்.கே. சந்திரசிறி – இஸ்ரேலுக்கான இலங்கையின் தூதுவர்.

7.  தம்மிக பெர்னாண்டோ – கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.

8.  அநுர விதானகே – லெபனானுக்கான இலங்கையின் தூதுவர்.

9. பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி – ஈரானுக்கான இலங்கையின் தூதுவர்.

10. எம். பாரூக் எம். பௌசர் – பாலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!