ஆம்புலன்ஸ்கள், அவசர மையங்கள் சேதம் – தெஹ்ரானில் பெரும் அழிவு
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சுமார் 460 பேர் உயிரிழந்ததுடன், தெஹ்ரான் அவசர சுகாதார சேவைகள் துறையின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் முன்னெடுத்ததிலிருந்து 4,309 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த பெப்ரவரி மாதம் 28 முதல் தலைநகரில் நடந்த தாக்குதல்களில் 18 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 18 அவசரகால சிகிச்சை மையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான் முழுவதும் இடம்பெற்ற தாக்குதல்களில் 1,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 10,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்கள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்தும் நிலவுகிறது.





