இலங்கை செய்தி

மக்களே அவதானம்! யாழில் அரங்கேறிய நூதன மோசடி!!

சமூக வலைத்தளங்கள் ஊடாக “காஸ் குக்கர்” “Gas cooker” விற்பனை என்ற போர்வையில் மோசடியில் ஈடுபட்டுவரும் தம்பதி தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவீன ரக காஸ் குக்கர் “Gas cooker” விற்பனைக்கு உள்ளதாக வெளியான முகநூல் விளம்பரத்தை நம்பி , அவர்களுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து தமது வங்கி கணக்கு இலக்கத்திற்கு பணத்தினை வைப்பிலிடுமாறும் , மேலதிக தகவல்களுக்கு வட்ஸ் அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறி அவர்கள் இலக்கத்தை வழங்கியுள்ளனர்.

காஸ் குக்கரின் “Gas cooker” விலை 32 ஆயிரம் ரூபா எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கமைய மேற்படி வங்கி கணக்கு இலக்கத்திற்கு பணத்தை வைப்பிலிட்டு , அதனை வாட்ஸ்அப் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் காஸ் குக்கரை “Gas cooker” அனுப்பி வைப்பதாக இரண்டு மூன்று தினங்கள் ஏமாற்றி , தாம் அனுப்பி வைத்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

அதனை அனுப்பி வைத்தமைக்காக ஆதாரத்தை கேட்ட போது , அவர்கள் வட்ஸ் அப் இலக்கத்தை அழித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் , அவர்களின் முகநூல் கணக்கில் காணப்பட்ட முகப்பு படம் தொடர்பில் ஆராய்ந்த வேளை அந்த படம் , புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்த தம்பதியினரின் படம் என தெரிய வந்துள்ளது.

அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரிந்து , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!