இஸ்ரேலை நோக்கி ஹெஸ்பொல்லா சுமார் 70 ராக்கெட்டுகள் ஏவியது
ஹெஸ்பொல்லா அமைப்பு நள்ளிரவு முதல் இஸ்ரேலை நோக்கி சுமார் 70 ராக்கெட்டுகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி கூறுகையில், பல ராக்கெட்டுகள் தெற்கு லெபனானில் இருந்து ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
“நேற்று நள்ளிரவுக்குப் பிறகு இஸ்ரேலை நோக்கி சுமார் 70 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், இந்த வார தொடக்கத்தில் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்ததிலிருந்து, லெபனான் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேலிய படைகள் தாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த தாக்குதல்களில் 70 ஹெஸ்பொல்லா போராளிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திங்கட்கிழமை முதல் லெபனானில் இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 217 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பலர் பொதுமக்கள் எனவும் கூறப்படுகிறது.





