ஹார்முஸ் நீரிணை வழி முடக்கம்: ஈரானிடம் பாதுகாப்பு கோருகிறது சீனா!
தமது நாட்டு கப்பல்களுக்குப் பாதுகாப்பு கோரி ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இதற்குரிய பேச்சு இடம்பெறுகின்றது.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை வகிக்கும் இப்பாதையில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கியுள்ளதால், எரிசக்தி விலைகள் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன.
இந்த மோதலில் ஈரான் மீதான தாக்குதல்களைச் சீனா கண்டித்துள்ளதுடன், தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க ஈரானுடனான உறவை வலுப்படுத்தி வருகிறது.





