இலங்கை செய்தி

திருமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் சிப்பாய் கைது!

திருகோணமலை வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய், வான் எல , பன்சல் கொடல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய முன்னாள் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் 1,450 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபரை வான் எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

மிருகங்களை வேட்டையாடுவதற்காகவே இவர் உள்ளூர் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!