விளையாட்டு

அரை இறுதிச் சுற்று இன்று ஆரம்பம்: நியூசிலாந்து. தென்னாபிரிக்கா மோதல்!

ICC T20உலகக் கிண்ண கிரிக்​கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென்னாபிரிக்காSouth Africa – நியூசிலாந்து New Zealand அணி​கள் பலப்பரீட்சை நடத்​துகின்​றன.

கொல்​கத்தா ஈடன் கார்​டன் Eden Gardens மைதானத்​தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

எய்​டன் மார்க்​ரம் தலை​மையி​லான தென்னாபிரிக்கா அணி நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் இது​வரை தோல்​வியை சந்​திக்​காத அணி​யாக வலம் வரு​கிறது.

லீக் சுற்​றில் 4 ஆட்​டங்​கள், சூப்​பர் 8 சுற்​றில் 3 ஆட்​டங்​கள் என தொடர்ச்​சி​யாக 7 ஆட்​டங்​களில் வெற்றி கண்​டிருந்​தது.

மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூசிலாந்து அணி லீக் சுற்​றில் 3 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​தது. தொடர்ந்து சூப்​பர் 8 சுற்​றில் பாகிஸ்​தானுடன் மோத இருந்த ஆட்​டம் மழை காரண​மாக ரத்​தானது.

இலங்கை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் வெற்றி கண்ட நிலை​யில் இங்​கிலாந்து அணி​யிடம் தோல்வி அடைந்​தது. எனினும் நிகர ரன் ரேட் காரண​மாக பாகிஸ்​தான் அணியை தொடரில் இருந்து வெளி​யேற்றி அரை இறுதி வாய்ப்பை பெற்​றிருந்​தது நியூசிலாந்து அணி.

T20 உலகக் கிண்ண வரலாற்​றில் நியூசிலாந்து அணிக்கு எதி​ராக தென்னாபிரிக்கா அணி 5 முறை மோதி உள்​ளது. இதில்​ அனைத்​தி​லும்​ தென்னாபிரிக்கா அணியேவெற்றிபெற்றுள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!