ஜப்பான் நிறுவனத்திடமிருந்து ட்ரோன் கேமராக்கள் நன்கொடை
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் , வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ட்ரோன் கேமராக்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
JICA நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையில் நிலையான வீதிப் போக்குவரத்திற்காக மண்சரிவுத் தடுப்பு திறனை வலுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், JICA பிரதிநிதி நோரு மட்சுனோஷிட்டா (Mr. Noru Matsunoshita), வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. ரி. பாஸ்கரனிடம் அடையாள ரீதியாக ட்ரோன் கேமராவைக் கையளித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்
“பெருந்தெருக்களை அண்மித்த பகுதிகளில் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் போது, எம்மால் அந்த இடங்களுக்குச் செல்ல முடியாததால் தகவல்களைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன.
இந்த ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்துவதன் மூலம், அனர்த்தம் ஏற்பட்ட இடங்களின் காட்சிகளை எளிதாகவும் துல்லியமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். இந்தத் தரவுகளைக் கொண்டு வீதித் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு (Planning & Design) பணிகளை விரைவாகவும் எளிதாகவும் முன்னெடுக்க முடியும்.





