சிம்பாப்வே அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கு
சிம்பாப்வே அணிக்கு 257 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் இன்றைய (26) மற்றுமொரு போட்டியில் இந்தியா மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதுகின்றன.
சென்னையில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அபிஷேக் சர்மா 55 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 50 ஓட்டங்களையும், திலக் வர்மா 16 பந்துகளில் 44 ஓட்டங்களையும் குவித்தனர்.




