சோமாலியாவில் பசி கொடுமை -உலக உணவுத் திட்டத்தின் உதவி ஏப்ரல் மாதத்திற்குள் நிறுத்தப்படுமா?
சோமாலியாவில் நிதி பற்றாக்குறையால் உலக உணவுத் திட்டம் (WFP) வழங்கும் அவசர உணவு உதவி ஏப்ரல் மாதத்திற்குள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மிக கடுமையான பசி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. மனிதாபிமான நிதியில் கடுமையான குறைவு உள்ளது என்றும் உலக உணவுத் திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, சுமார் 4.4 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்மை அல்லது மோசமான நிலைகளை எதிர்கொள்கின்றனர். இதில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையான பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சோமாலியா உலகின் மிகவும் காலநிலை பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாகும்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த WFP அவசரகால தயார்நிலை மற்றும் பதிலளிப்பு இயக்குனர் ரோஸ் ஸ்மித்
“நிலைமை ஆபத்தான அளவில் மோசமடைந்து வருகிறது. குடும்பங்கள் அனைத்தையும் இழந்துள்ளன, மேலும் பலர் ஏற்கனவே விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர். உடனடி உணவு உதவி இல்லாமல், நிலைமைகள் வேகமாக மோசமாகும். மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள், பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள், சரியான நேரத்தில் உதவியை பெற முடியாமல் இருக்கலாம்.” என்றார்
இலங்கைக்கு சமீபத்திய பசி நெருக்கடியைப் போல, சோமாலியாவிலும் அவசர நடவடிக்கை அவசியமாக உள்ளது.




