உலகம்

இராணுவ சட்டம் அமுற்படுத்தப்பட்ட விடயம் – மன்னிப்பு கோரினார் யூன் சுக் இயோல்!

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) குறுகிய கால இராணுவச் சட்ட அறிவிப்பிற்காக இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.

சியோல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், தனது இராணுவச் சட்ட ஆணையால் ஏற்பட்ட கஷ்டம் மற்றும் விரக்திக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது எனக் கூறிய அவர், இந்த தீர்ப்பு அரசியல் பழிவாங்கல் என்றும் விமர்சித்துள்ளார்.

“தேசத்தைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவை ஒரு ‘கிளர்ச்சி’ என்று களங்கப்படுத்தவும், அரசியல் தாக்குதல்களுக்கு அப்பால்  எதிரிகளை  ஒழிப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தவும் முயலும் சக்திகள் எதிர்காலத்தில் மேலும் மேலும் அதிகரிக்கும்” என்றும்  அவர் கூறினார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!