பராலிம்பிக் போட்டி – புறக்கணிக்கப்படும் ரஷ்ய மற்றும் பெலாரஸ்ய வீரர்கள்!
இத்தாலியில் பராலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள நிலையில், ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் தேசியக் கொடிகள் மற்றும் கீதங்களுடன் போட்டியிட அனுமதிக்கும் முடிவைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து 10 வீரர்கள் கலந்துகொள்ள ஏற்பாட்டுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ரஷ்யாவின் நான்கு ஆண்டுகால உக்ரைன் படையெடுப்பு காரணமாக, சர்வதேச பாராலிம்பிக் குழு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி (Antonio Tajani) மற்றும் விளையாட்டு அமைச்சர் ஆண்ட்ரியா அபோடி (Andrea Abodi ) ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் ஐபிசி (IPC) வழங்கிய தீர்ப்புக்கு இத்தாலி முழுமையான எதிர்ப்பை” வெளிப்படுத்தியது. இந்நிலையில் ரோம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 33 பிற நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே மேற்படி இத்தாலி அரசாங்கத்தின் கோரிக்கையை கண்டித்துள்ள ரஷ்ய அரசாங்கம், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளது.





