இந்தியா தமிழ்நாடு

மீண்டும் வெல்வோம்: தி.மு.க. ஆட்சி தொடரும் ! தமிழக முதல்வர் சூளுரை!

“ சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து DMK ஆட்சி அமைப்போம். தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’

இவ்வாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் M.K. Stalin சூளுரைத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாகச் செய்தாகவே நான் நினைக்கிறேன்.

இந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றுள்ளேன்.

நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் எனும் ஊக்கத்தையும், எதனையும் எதிர்கொள்ளும் வல்லமையையும் பெற்றுள்ளேன்.” எனவும் தமிழக முதல்வர் குறிப்பிட்டார்.

இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன்.

நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்.

உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்.” என மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்.

 

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!