இந்தியா தமிழ்நாடு

ஓ.பி.எஸ்சுக்கு தி.மு.க. வலை!

தமிழக சட்டப் பேரவைக்குரிய தேர்தல் நெருங்கும்வேளை கூட்டணி அமைக்கும் முயற்சி தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை M.K. Stalin , முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் OPS இன்று (20) சந்தித்து பேச்சு நடத்தியமை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு செய்தியாக மாறியது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.

இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம்,

“ ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன்.” எனக் குறிப்பிட்டார்.

தி.மு.க.வில் இணைவீர்களா என்று கேள்விக்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், “ பொறுத்து இருந்து பாருங்கள்” என்று தெரிவித்தார்.

தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காதது, ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க. ஆதரவு மனநிலையில் இருப்பதை வெளிப்படுத்துகின்றது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவுடன் இணைத்துக்கொள்ள முடியாது என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதால் தமது கூட்டணியை வலுப்படுத்துவதற்கு தி.மு.க. தீவிரம் காட்டிவருகின்றது.

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!