இந்தோனேசியா மீதான இறக்குமதி வரியை குறைத்தது அமெரிக்கா!
இந்தோனேசியா மீது விதிக்கப்பட்ட 32 சதவீத வரியானது 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், விவசாயம், சுகாதாரம், கடல் உணவு, தொழில்நுட்பம் மற்றும் கார் உள்ளிட்ட 99 சதவீதமான பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க மக்களின் நலன்களை முன்னேற்றும் அதே வேளையில் “வர்த்தக தடைகளை உடைக்கும்” என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் (Jamieson Greer) கூறியுள்ளார்.
இதேவேளை தென்கிழக்கு ஆசிய நாட்டின் அரிய மண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அமெரிக்க நிறுவனங்களுக்கும் இந்தோனேசியா உதவும், இது வாஷிங்டன் அதன் முக்கியமான கனிமங்களின் விநியோகத்தை விரிவுபடுத்த உதவும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





