‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்’ பற்றி கதைத்தால் இணைவு சாத்தியமில்லை!
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுக்கிடையிலான பேச்சு எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இறுதிப்படுத்தப்படும்.”
இவ்வாறு ஐ.தே.கவின் UNP பிரதி செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார்.
அடுத்த தேர்தலை கூட்டணியாகவே எதிர்கொள்வோம் எனவும் அவர் கூறினார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ ஐக்கிய மக்கள் சக்தி SJP இணைவுக்கு தாமதப்படுத்தினால் அது அக்கட்சிக்கே பாதகமாக அமையும்.
இணைவுக்குரிய பேச்சு நடக்கும்போது அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்குரிய உத்தரவாதத்தைக் கோரினால் கலந்துரையாடல் முறிவடையலாம்.
ஏனெனில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகைமையை நிரூபிக்கும் வகையில் செயலை காட்ட வேண்டும்.” – எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.





