வேற்றுக்கிரகவாசிகள் உண்மையா? – பராக் ஒபாமா பதில்!!
ஏரியா -51, வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய பல தகவல்களை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மனம் திறந்து பேசியுள்ளார்.
ப்ரோட்காஸ்ட் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், வேற்றுக்கிரகவாசிகள் உண்மையானவர்கள் எனவும், ஆனால் தான் அவர்களை ஒருபோதும் சந்தித்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியானவுடன் தான் கேட்ட ஆரம்ப கேள்வி வேற்றுகிரகவாசிகள் இருக்கும் இடத்தைப் பற்றியதுதான் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் ஏரியா – 51 இல் இரகசிய நிலத்தடி பாதை உள்ளது என்ற கூற்றையும் அவர் மறுத்துள்ளார்.
நெவாடாவில் உள்ள ஒரு இராணுவத் தளமான ஏரியா 51, நீண்ட காலமாக மறைக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகள் விண்கலம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சதி கோட்பாடுகளுக்கு உட்பட்டது.
இது தொடர்பான உண்மை தகவல்களை ட்ரம்ப் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்பில் எந்த நேர்காணலிலும் ட்ரம்ப் பகிரங்கப்படுத்தியதில்லை.





