வடமேற்கு நைஜீரியாவில் கோர விபத்து – 30 பேர் பலி!
வடமேற்கு நைஜீரியாவில் நேற்று இடம்பெற்ற சாலை விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனோ மாநிலத்தின் கெசாவா (Gezawa) பகுதியில் உள்ள குவானர் பார்டேயில் (Kwanar Barde) இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
டிரக் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் அதேவேளை விபத்தில் வேறு எந்த வாகனங்களும் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படவில்லை.
குறிப்பாக டிரக் ரக வாகன சாரதியின் பொறுப்பற்ற நடவடிக்கையே விபத்திற்கு காரணம் என ஆளுநர் அப்பா யூசுப் (Abba Yusuf ) குறிப்பிட்டுள்ளார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





