சலுகை நிதியுதவியை அணுகுவதற்கான இலங்கையின் தகுதியை அங்கீகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி!
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) சலுகை நிதியுதவியை அணுகுவதற்கான இலங்கையின் தகுதியை அங்கீகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகள், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் இலங்கையின் அவசர அபிவிருத்தி நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான விருப்பங்களை விரிவுபடுத்துகிறது என்று பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட பிராந்திய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
ADB இன் வளரும் உறுப்பு நாடுகளில் சலுகை ஆதாரங்களுக்கான தகுதி தனிநபர் மொத்த தேசிய வருமானம் மற்றும் கடன் தகுதியின் அடிப்படையில் அமைந்துள்ளது.
கடினமான மற்றும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் தனது முடிவு பரிசீலிக்கப்பட்டதாக ADB விளக்கமளித்தது.