வாக்குவாதம் முற்றியதால் மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை! (வீடியோ)
இந்திய மாநிலம் குஜராத்தில் பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (45). இவரது மனைவி ரேகா, சந்தா. கடந்த 18ம் திகதி அன்று இரவு, ராமானுஜ் சாஹூவுக்கும் அவரது மகள் சந்தாவுக்கு இடையே மொட்டை மாடியில் தூங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஆத்திரமடைந்த ராமானுஜ் வீட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து மகளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சந்தா இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.அதன் பின்பும் ஆத்திரம் அடங்காத ராமானுஜ் மனைவியையும் துரத்திச் சென்று தாக்கியுள்ளார். இதில் அவரது மனைவியின் இரு விரல்கள் துண்டாகியுள்ளது.
https://twitter.com/i/status/1663164243905253377
இதற்கிடையில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான சந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவிட்டு, ராமானுஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பிலான cctv காட்சிகள் வெளியாகி பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. முன்னதாக, டெல்லியில் 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியும், கல்லால் கொடூரமாக தாக்கியும் கொலை செய்த வீடியோ காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.