அமெரிக்கா சென்ற இந்திய குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பென்சில்வேனியா சென்ற இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகியிருந்த நிலையில் அவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டாக்டர் கிஷோர் திவான் (89), ஆஷா திவான் (85), ஷைலேஷ் திவான் (86), கீதா திவான் (84) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் சாலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மேற்கு விர்ஜினியா நகர ஷெரிப் விசாரணை முடிந்த பிறகு கூடுதல் தகவல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)