அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரை தீர்க்கும் மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரை தீர்க்கும் நோக்கில் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் இன்று (09.06) ஆரம்பமாகவுள்ளன.
உலக வளர்ச்சியை அச்சுறுத்தும் உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களைத் தீர்க்க, வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் உள்ளிட்ட மூத்த அமெரிக்கக் குழு, துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் போன்ற சீன பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்பத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும் சீன அரிய மண் தாதுக்களின் ஏற்றுமதி, அத்துடன் கணினி சில்லுகள் உட்பட அமெரிக்க தயாரிப்புகளை பெய்ஜிங் அணுகுவது ஆகியவை நிகழ்ச்சி நிரலில் அதிகமாக கலந்துரையாடப்படும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம், வாஷிங்டனும் பெய்ஜிங்கும் வர்த்தக கட்டணங்கள் தொடர்பாக ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக் கொண்டன, ஆனால் அதன் பின்னர் ஒவ்வொரு நாடும் ஒப்பந்தத்தை மீறியதாக மற்றொன்று குற்றம் சாட்bயமை குறிப்பிடத்தக்கது.