இந்திய நதிகளிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் கிடையாது – பிரதமர் மோடி திட்டவட்டம்

இந்தியாவின் அதிகாரத்தின் கீழ் வரும் நதிகளிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் வழங்கப்படதாதென பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தண்ணீர் வளங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றிக் கலந்தாலோசிக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்தியா இருதரப்புக்கும் இடையே பல்லாண்டுகளாக நீடிக்கும் தண்ணீர் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1960ஆம் ஆண்டு உலக வங்கி இருதரப்புக்கும் இடையே பேசி Indus Treaty எனும் நதி நீர் பகிர்வுத் திட்டத்தைக் கொண்டுவந்தது.
சென்ற மாதம் 22ஆம் திகதி காஷ்மீரின் பெஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நதி நீர் ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதாக அறிவித்தது.
அந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானே காரணம் என்று இந்தியா கூறுகிறது. பாகிஸ்தான் அதை மறுத்தது.