ஆஸ்திரேலியாவில் காளான் கொடுத்து கணவரின் குடும்பத்தை கொலை செய்த பெண்

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நச்சு கலந்த காளானைச் சமைத்து கொடுத்து மாமியாரையும் மாமனாரையும் கொலை செய்துள்ளார்.
2023ஆம் ஆண்டில் அந்தச் சமையல் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. எரின் பேட்டர்சன் அவருடைய கணவரின் குடும்பத்தினருக்கு அந்த நச்சுக் காளானைச் சமைத்துக் கொடுத்தார். அதை உண்டு அவருடைய கணவரின் பெற்றோரும் அத்தையும் உயிரிழந்துள்ளார்.
ஒரு விருந்தாளி மாத்திரம் உயிர் பிழைத்துள்ளார். எரின் சமைக்கும்போது யாரையும் சமையல் அறைக்குள் அனுமதிக்கவில்லை என உயிர்பிழைத்த அந்த விருந்தினர் கூறினார்.
எந்த உதவியையும் ஏற்றுக்கொள்ளாமல் எரின் தனியாகவே அனைவருக்கும் சமைத்தார். உணவு உட்கொண்ட சில மணி நேரத்திலேயே விருந்தினர்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர்.
இது ஒரு வருத்தமளிக்கும் விபத்து, திட்டம் போட்டுச் செய்த கொலை அல்ல என்று எரினின் வழக்கறிஞர்கள் கூறினர்.
வழக்குத் தொடரும் நிலையில் ஆறு வாரங்களுக்கு வழக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.