“ரோலக்ஸ்” ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்..

சூர்யா தற்போது ரெட்ரோ, RJ பாலாஜி உடன் அடுத்த படம் என பிசியாக நடித்து வருகிறார். மேலும் அவர் நடிக்க இருப்பதாக பல வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படமும் தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல் சூர்யா ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறது.
விக்ரம் படத்தின் கிளைமாக்ஸில் வந்து மிரட்டிய ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி லோகேஷ் கனகராஜ் படம் எடுக்க போகிறார் என்றும், அதன் ஷூட்டிங் அடுத்த வருடம் ஆரம்பத்தில் துவங்க இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தை தயாரித்து வரும் KVN Productions நிறுவனம் தான் இதை தயாரிக்க போகிறதாம்.
(Visited 1 times, 1 visits today)