பிரபல இயக்குநருடன் டேட்டிங்கில் சமந்தா..? வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல இயக்குநருடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நடிகை சமந்தா, பிரபல இயக்குநருடன் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்து மற்றும் நோய் தாக்கத்திற்குப்பின் சிட்டாடல்- ஹனி பன்னி என்ற ஓடிடி தொடரிலும் நடித்திருந்தார். விஷயம் இங்குதான் இருக்கிறது. பிக்கிள்பால் விளையாட்டின் சென்னை அணிக்குச் சொந்தக்காரரான சமந்தா, தனது வீரர்களை ஊக்கப்படுத்தும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், தான் நடித்த ஹனிபன்னி தொடரின் இயக்குநரும் இரட்டை இயக்குநர்களான ராஜ், டிகே-வில் ஒருவரான ராஜ் நிதிமோருவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடிகை சோபியா துலிபாலாவை நாக சைதன்யா மணமுடித்த நிலையில், சமந்தாவும் இயக்குநரை டேட் செய்வதாக டோலிவுட்டில் தகவல் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.