பல விமானங்கள் தாமதமானதற்கு காரணமாகிய எலோன் மஸ்க்
சமீபத்திய வாரங்களில் குவாண்டாஸ் விமானங்களில் ஏராளமான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இது எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ரொக்கெட்டுகளின் குப்பைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் குவாண்டாஸுக்கு அறிவித்துள்ளது.
இந்த ரொக்கெட்டின் குப்பைகள் தெற்கு இந்தியப் பெருங்கடல் வழியாக பூமிக்குத் திரும்பும் என்று குவாண்டாஸுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், கடந்த சில வாரங்களாக சிட்னியில் இருந்து ஜோகன்னஸ்பர்க்கிற்கு செல்லும் பல விமானங்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டாஸ் செயல்பாட்டுத் தலைவரான பென் ஹாலண்ட், இது தொடர்பான எதிர்காலப் பணிகளில் ஸ்பெக்ஸ்எக்ஸுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 5 visits today)