வட அமெரிக்கா

சீன ராஜதந்திரியை நாடு கடத்தவுள்ள கனடா – எதிர்பு தெரிவித்துள்ள சீனா

கனடாவிற்கான சீனத் தூதரகத்தில் பணியாற்றி வரும் ஸாவொ வெய் என்ற சீன ராஜதந்திரியே நாடு கடத்தப்பட உள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் சொங் மற்றும் அவரது குடும்பம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் மீது சீனா அரசியல் தலையீடுகளை செய்யும் முனைப்புக்களில் இந்த ராஜதந்திரி செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்டின் சட்டங்களுக்கு ஸாவோ வெய், பொருத்தமற்றவர் என வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோன் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களின் பாதுகாப்பும் மக்களின் சுபீட்சமும் மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் உள்விவகாரங்களில் சீனா தலையீடு செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியே இவ்வாறு ராஜதந்திரி ஸாவோ நாடு கடத்தப்பட உள்ளார்.

இதேவேளை, தமது நாட்டு ராஜதந்திரியை நாடு கடத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் இதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

 

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்