50%க்கும் அத்திகமான பிரெஞ்சு மக்கள் அரசாங்கம் வீழ்ச்சியடைய விருப்பம்: கணக்கெடுப்பு
பிரான்சின் 53 சதவீதமான மக்கள் அந்நாட்டின் பிரதமர் மிச்செல் பார்னியரின் அரசாங்கம் கவிழ்வதை விரும்புகின்றனர் என்று கருத்தாய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
பிரான்சின் சட் ரேடியோ வானொலிக்காக இஃபொப்-ஃபிடூஷியல் அமைப்பு நடத்திய கருத்தாய்வில் இந்த விவரம் தெரிய வந்தது. கருத்தாய்வின் முடிவுகள் வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) வெளியிடப்பட்டன.
பார்னியர் பரிந்துரைத்திருக்கும் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் அவரின் அரசாங்கம் மீது மக்கள் கோபம் கொண்டிருப்பதால் இந்நிலை உருவாகியுள்ளதாகக் கருத்தாய்வில் தெரிய வந்துள்ளது.
பார்னியரை எதிர்க்கும் இடது சாரி, பெரும் வலது சாரியினர் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை நடக்கச் செய்தால் அவர் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு அல்லது அடுத்த வாரத்துக்குள்ளேயே ஆட்சியை இழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் பார்னியர் அநேகமாகத் தோல்வியடைவார் என்று அரசியல் தரப்பிலிருந்து பலர் கூறியுள்ளனர்.
இஃபொப்-ஃபிடூஷியல் கருத்தாய்வு, செவ்வாய், புதன்கிழமைகளில் (26, 27 நவம்பர்) 1,006 பேரைக் கொண்டு நடத்தப்பட்டது.
அதேபோல் புதன்கிழமையன்று பிஎஃப்எம் டிவி தொலைக்காட்சிக்காக இலேப் அமைப்பு நடத்திய கருத்தாய்வில் பங்கேற்றோரில் 63 சதவீத்த்தினர்,பார்னியரின் அரசாங்கம் கவிழ்ந்தால் அதிபர் இமேனுவெல் மெக்ரான் பதவி விலகவேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.