செய்தி

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் குற்றவாளி என தீர்ப்பு

தென்கொரியாவில் தேர்தல் சட்டத்தை மீறியதன் தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜெ மியூங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.அந்தச் சிறைத்தண்டனை இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக லீ கூறியுள்ளார்.எந்தவொரு சிறைத் தண்டனையோ ஒரு மில்லியன் வோனுக்கு மேலான அபராதமோ உறுதியானால், லீ நாடாளுமன்றப் பதவியை இழந்துவிடுவார். அதோடு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவரால் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது.

லீ, சோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தைச் சென்றடைந்தபோது, ஆதரவாளர்கள் அவரது பெயரை உரக்கக் கத்தி முழக்கமிட்டனர். நீதிமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களும் கூடியிருந்தனர்.

முக்கிய எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவரான லீ, 2022ஆம் ஆண்டு தேர்தலில் அதிபர் யூன் சுக் யோலிடம் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

லஞ்சம், ஊழல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பிறகு லீ, குறைந்தது நான்கு வழக்குகளில் விசாரணையை எதிர்நோக்குகிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் அதிபர் வேட்பாளராகக் களமிறங்கிய லீ, பொய்யான தகவலைத் தெரிவித்து தேர்தல் சட்டத்தை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேம்பாட்டுத் திட்டம் ஒன்றுக்குப் பொறுப்பேற்ற நகர அதிகாரிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

See also  லக்னோ அணியிலிருந்து விலகியதன் காரணத்தை வெளியிட்ட கே.எல்.ராகுல்!

லீ மேயராகச் சேவையற்றிய ‘சியோங்னாம்’ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் திட்டம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. லீக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.அதே பகுதியில் நில மேம்பாட்டுத் திட்டம் குறித்து 2021ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தணிக்கையின்போது பொய்யான தகவலைத் தெரிவித்ததாகவும் லீ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இருந்தாலும், வரும் 2027ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் லீ போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content