வட அமெரிக்கா

அமெரிக்க தேர்தல் – டிரம்பின் வெற்றிக்காக மஸ்க் செலவிட்ட தொகை வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய உருவாக்கிய செயற்குழுவுக்கு Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், 200 மில்லியன் டாலர் செலவிட்டதாக தெரியவந்துள்ளது.

தேர்தல் பணிகளுக்காக அந்தச் செயற்குழு அமைக்கப்பட்டது. அதற்குப் பெருமளவு தொகையை வழங்கியவர் மஸ்க் என்றும் நம்பப்படுகிறது.

முதன்முறை வாக்களிப்பவர்களையும் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களையும் டிரம்ப்புக்கு ஆதரவு வழங்க ஊக்குவிப்பதே செயற்குழுவின் முக்கியப் பணியாக இருந்தது.

டிரம்ப்பின் வெற்றிக்கு மஸ்க் பணம் மட்டும் செலவிடவில்லை. தேர்தல் பிரசார மேடைகளிலும் அவர் டிரம்ப்புடன் தோன்றி தமது ஆதரவைத் தெரிவித்தார்.

அதன் மூலம் அவரை முன்னுதாரணமாய் கருதும் பல இளையர்கள் டிரம்ப்புக்கு ஆதரவளித்ததாக கூறப்படுகின்றது.

தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டிரம்ப் புளோரிடாவில் வெற்றி உரை ஆற்றியபோது எலோன் மஸ்க்கைப் புகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 17 times, 1 visits today)
See also  அமெரிக்காவை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்!
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content