பொழுதுபோக்கு

அமரனை அமர்க்கலப்படுத்திய ஜிவி பிரகாஷுக்கு S.K கொடுத்த காஸ்ட்லி கிவ்ட்

சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் அமரன் படம் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக அமைந்துவிட்டது. ரஜினி மற்றும் விஜய்க்கு பிறகு குறுகிய நாளில் 100 கோடி வசூல் செய்த படமாக அமரன் மாறி இருக்கிறது.

படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ் சாய்பல்லவி என்றால் அதே அளவுக்கு பாசிட்டிவ் படத்தின் இசை.

இந்த படத்தின் வெண்ணிலவு சாரல் நீ மற்றும் மின்னலே போன்ற பாடல்கள் பலரது ரிங்டோனாக மாறியிருக்கிறது. ஜிவி பிரகாஷ் தன்னை சிறந்த ஒரு இசையமைப்பாளராக மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்.

அமரன் வெற்றியால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.

விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் எனும் கேரக்டரில் நடித்திருந்தபோது ரோலக்ஸ் வாட்ச் அவருக்கு கமலஹாசன் பரிசளித்திருந்தார்.

அந்த சமயம் இந்த வாட்ச் தமிழ் நாட்டில் பெரிய அளவில் பேமஸ் ஆனது. அதை தொடர்ந்து தற்போது அமரன் பட வெற்றிக்காக ஜிவி பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன், TAG HEUER வாட்ச் பிராண்டை பரிசளித்திருக்கிறார். இதன் விலை ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தில் தொடங்கி 21 லட்சம் வரை இருக்கிறது.

See also  முக்கியமான 25 பேருக்கு விருது வழங்கும் விஜய்.. யார் அவர்கள்?

பெரும்பாலும் இந்த கடிகாரங்களை கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் செல்லும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது துல்லியமான மணியை கணக்கிடுவதாகவும் சொல்லப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content