இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று சற்று குறைந்துள்ளது.
கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் 218,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 201,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் 24 கரட் தங்கம் 218,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 202,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
(Visited 58 times, 1 visits today)