இலங்கை

இலங்கையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு – நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக லாப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் லாப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், லாப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்புடன் வந்த சரக்குக் கப்பல் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு கையிருப்பு விநியோகிக்கப்படும் என லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்தார்.

(Visited 46 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்