புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

ரம்யா பாண்டியனுக்கு விரைவில் டும்.. டும்.. டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

டம்மி டப்பாசு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதையடுத்து ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.

ரம்யா பாண்டியனுக்கு புகழ் வெளிச்சத்தை தேடித் தந்ததோடு, அவரை ஒரே நாளில் உச்சத்துக்கு கொண்டு சென்றது அவரின் மொட்டைமாடி போட்டோஷூட் தான்.

ரம்யா பாண்டியனுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கியது விஜய் டிவி. அதில் இறுதிவரை சென்று நூலிழையில் டைட்டில் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்ட ரம்யாவுக்கு அடுத்ததாக பிக்பாஸ் வாய்ப்பு வந்தது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா, அதிலும் பைனல் வரை முன்னேறி அசத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கலக்கபோவது யாரு நிகழிச்சியில் நடுவராக இருந்த ரம்யா பாண்டியனுக்கு படிப்படியாக சினிமா வாய்ப்புகளும் வரத் தொடங்கின.

சின்னத்திரையில் ஜொலித்த ரம்யா பாண்டியனுக்கு சினிமா வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை.

இதனால் வேறுவழியின்றி கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகும் முடிவுக்கு வந்துள்ளார் ரம்யா. இவரது திருமணம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளதாம். இது லவ் மேரேஜ் என்றும் கூறப்படுகிறது. அவர் லோவல் தவான் என்கிற யோகா பயிற்சியாளரை அடுத்த மாதம் கரம்பிடிக்க உள்ளாராம்.

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்றார். அப்போது அங்கு பயிற்சியாளராக பணியாற்றி வரும் லோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதனால் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணத்துக்கு தயாராகிவிட்டார் ரம்யா.

ரம்யா பாண்டியனின் திருமணம் வருகிற நவம்பர் மாதம் 8ந் தேதி ரிஷிகேஷில் கங்கை நதி ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து நடைபெற உள்ளதாம்.

அங்கு தான் லோவல் தவானை சந்தித்து காதல் வயப்பட்டதால் அங்கேயே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்களாம். இதையடுத்து நவம்பர் 15-ந் தேதி சென்னையில் இவர்களது திருமண வரவேற்பும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 59 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!