கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதை மூடல்
கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையைத் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பராமரிப்பு பணிகள் இந்த மாதம் முழுவதும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதை மாத்திரம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 10 times, 10 visits today)