இலங்கை செய்தி

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கை ஒருபோதும் செயற்படாது -அனுர உறுதி!

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கைப் பிரதேசம் ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், இலங்கை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் கவனம் செலுத்திய  ஜெய்சங்கர், இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுவதன் மூலம் சமத்துவம், நீதி, மரியாதை மற்றும் அமைதிக்கான தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளுக்கும் இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தினார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாகவும் வினைத்திறனாகவும் அமுல்படுத்துவதும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதும் இந்த நோக்கங்களை இலகுவாக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 15 times, 15 visits today)
See also  இலங்கையில் VVIP பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content