இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தளம் அமைந்துள்ள பகுதியில் நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் பாலியில் உள்ள உபுட் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.52 மணியளவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உபுட் நகருக்கு வட-வடகிழக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், 35 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
(Visited 3 times, 1 visits today)