இலங்கையில் மகளால் தாய்க்கு நேர்ந்த கதி – காப்பாற்றிய 40 வருட நண்பி
கலேவெல பிரதேசத்தில் தனது நண்பி, மகளின் துன்புறுத்தல்களுக்குள்ளாகுவதற்கு நீதி கோரி பொலிஸாரிடமும் அரச அதிகாரிகளிடமும் சென்ற பெண் ஒருவர் தொடர்பான செய்தியொன்று பதிவாகியுள்ளது.
தாய் ஒருவரை வீதிக்குக் கொண்டு வந்து வீதியில் விட்டுச் சென்றமைக்கு நீதி கோரியும், சாகும்வரை தாயின் வாழும் உரிமைக்காகவும் அரச அதிகாரிகளின் ஆதரவை கோரி கலேவெல எனமேல்பொட பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான மெனிக்கே என்ற தாய் இவ்வாறு அதிகாரிகளிடம் சென்றுள்ளார்.
40 வருடங்களாக தான் நன்கு அறிந்த தனது 74 வயதான லபி, என்ற நண்பி கடந்த போயா தினத்தன்று கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டு விட்டு செல்லப்பட்ட நிலையில் மெனிக்கே என்ற தாயால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான லபி, அலவ்வ பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பில் தனது மகளுடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த போயா தினத்தன்று தனது மகள் முச்சக்கர வண்டியில் ஏற்றி, திட்டி, வீதியில் விட்டுச் சென்றுள்ளார் என பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்துள்ளார்.
தனக்கு கடிதம் எழுதவோ படிக்கவோ தெரியாது எனவும் தன்னை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் எனவும் தெரியவந்ததால் சத்தமாக அழுதுகொண்டு வந்த தன்னை முச்சக்கரவண்டியில் இருந்து இறக்கிவிட்டதாகவும் தாயார் கண்ணீருடன் கூறினார்.
மேலும் தனது மகளுக்கு மூன்று வயது இருக்கும் போது தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் வீடுகளில் கூலி வேலை செய்து, பாத்திரங்கள் கழுவி, விறகு விற்று, தன் மகளுக்கு உயர்கல்வி கற்பித்ததாக கண்ணீருடன் கூறினார்.
மெனிகே என்ற நண்பியே தன்னை காப்பாற்றியதாகவும் மகள் தன்னை இந்தப் பகுதிக்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என்று அவர் நம்பினார் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தான் இறக்கும் வரை எங்காவது தங்குவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உணர்ச்சிப்பூர்வமாக அந்த தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.