இலங்கை

இலங்கை – கிண்ணியா கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில், பெண்ணின் சடலமொன்று இன்று(18) காலை மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா அஹமட் லேன் வீதியைச் சேர்ந்த 33 வயதான பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் புத்தி சுவாதீனமற்றவர் எனவும் கடலில் குளிப்பதற்காக இன்று(18) காலை கடலில் இறங்கியதால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

பெண்ணின் சடலத்தை விசாரனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!