பிரான்ஸ் ஜனாதிபதியின் சம்பள விபரம் வெளியானது
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் சம்பள விபரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, ஜனவரி மாதம் ஜனாதிபதி பெற்றுக் கொண்ட வரிக்கழிவுகளுக்கு முந்திய சம்பளத் தொகை 14 ஆயிரத்து 586 யூரோக்கள் ஆகும். அவரது ஊதியம் முழு நேரப் பணிக்கான என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் செயற்பாடாகக் குடிமகன் ஒருவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எலிஸே மாளிகை ஜனாதிபதி இரண்டு மாதங்களுக்கான சம்பளப் பட்டியலை அவருக்கு வழங்கியுள்ளது.
டிசெம்பர் 2023, ஜனவரி 2024 ஆகிய இரண்டு மாதங்களுக்கான சம்பளப் பட்டியல்கள் கிடைத்துள்ளது.
முன்னாள் பத்திரிகையாளர் ஒருவரே சில மாத கால முயற்சிகளுக்குப் பின்னர் அரசுத் தலைவரது சம்பளப்பட்டியல்களைப் பார்வைக்குப் பெற்றுள்ளார்.
பிரான்ஸில் அரச மற்றும் பொது நிர்வாக சேவைகளில் உள்ள ஒருவரது வருமானம், சொத்து என்பன தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடுவதற்கு நாட்டின் குடிமகன் ஒருவருக்கு நிபந்தனை அற்ற உரிமை உள்ளமை குறிப்பிடத்தக்கது.