விளையாட்டு

RCB அணியின் பெயர் மாற்றம்… புதிய பெயர் வெளியானது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் பெயர் ”ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு” (Royal Challengers Bengaluru) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 22 அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட உள்ளது ஆர்.சி.பி அணி.

போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக ஆர்.சி.பி அணி ஒரு புதிய விஷயத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை ரூ.99 கட்டணம் செலுத்தி பார்க்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது ஆர்.சி.பி அணியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் பெயர் ”ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு” (Royal Challengers Bengaluru) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் அணிகளில் கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் போதும் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்றாக ”ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு” உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!