இலங்கை செய்தி

சமஷ்டிக் கொள்கையை கைவிட்டதா தமிழரசுக் கட்சி?

  • April 1, 2026
  • 0 Comments

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சமஷ்டியை […]

உலகம்

இராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி

  • April 1, 2026
  • 0 Comments

கிரிமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீவிர தேடுதலில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலகம் செய்தி

ஈரான்மீதான போர்: ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பு!

  • April 1, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை அவரது உரை இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த மோதலில் அமெரிக்கப் படையினருக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து அவர் கருத்து வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் அமெரிக்காவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலிய பிரதமர் இன்று விசேட உரை!

  • April 1, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese அந்நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு அவரது உரை இடம்பெறவுள்ளது. ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள விளைவுகளைக் கையாளும் அரசாங்கத்தின் நான்கு கட்டத் திட்டத்தை அவர் விளக்கவுள்ளார். பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியால் எரிபொருள் இருப்பு குறைந்தாலும், நாட்டின் கையிருப்பு போதுமானதாக இருப்பதாக அரசு உறுதியளிக்கிறது. அத்தியாவசியத் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கும் […]

உலகம் செய்தி

போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் அறிவிப்பு!

  • April 1, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்று கூறினார். இந்தப் போரை நிறுத்துவதற்கு ஈரான் எவ்வித முன்நிபந்தனைகளையும் அல்லது உடன்படிக்கைகளையும் அமெரிக்காவுடன் செய்துகொள்ளத் தேவையில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு சர்வதேச அரசியல் சூழலிலும் உலகளாவிய எரிசக்தி […]

error: Content is protected !!