ஐரோப்பா செய்தி

மூச்சு இருக்கும் வரை மக்களுக்காக போராடுவேன் – இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு பிரதமர் கருத்து

  • February 27, 2026
  • 0 Comments

மான்செஸ்டருக்கு வெளியே, கோர்டன் மற்றும் டென்டனில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) கருத்து வெளியிட்டுள்ளார். தொழிற்கட்சிக்கு “மிகவும் ஏமாற்றமளிக்கும் முடிவு” என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இந்த தேர்தலில் தொழிற்கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் ஸ்டார்மர், தற்போதைய அரசாங்கங்கள் பெரும்பாலும் இடைக்காலத் தேர்தல்களில் தான் முடிவுகளை எடுக்கின்றன என வலியுறுத்தினார். இதேவேளை, வாக்காளர்கள் விரக்தியடைந்துள்ளனர் மற்றும் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை பிரதமர் புரிந்துகொள்கிறார் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. “எனக்கு […]

ஐரோப்பா

உக்ரைனின் கத்தோலிக்கர்களைக் கௌரவிக்கும் அஞ்சல் தலையை வெளியிட்ட வத்திக்கான்!

  • February 27, 2026
  • 0 Comments

உக்ரைனின் கத்தோலிக்கர்களைக் கௌரவிக்கும் வகையில் வத்திக்கான் ஒரு புதிய தபால் தலையை வெளியிட்டுள்ளது. போர்க்காலத்தில் உக்ரேனியர்களின் அன்றாட போராட்டங்களைக் குறிப்பிடும் வகையிலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர்  கதீட்ரல் ஆலயத்தின் பிரகாசத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கத்தோலிக்க விடுமுறை நாட்களைக் குறிக்க அல்லது தேசிய தேவாலயங்களை கௌரவிக்க வத்திக்கான் தபால் சேவை அடிக்கடி முத்திரைகளை வெளியிடுகிறது, உள்ளூர் புனிதர்கள் போன்ற மதப் பிரமுகர்களின் சித்தரிப்புகள் இதில் இடம்பெறும். ஆனால் இம்முறை உக்ரைன் போரை […]

ஐரோப்பா செய்தி

இடைத்தேர்தலில் பசுமைக் கட்சி அதிரடி வெற்றி -தொழிற்கட்சி முதன்முறையாக தோல்வி

  • February 27, 2026
  • 0 Comments

கோர்டன் மற்றும் டென்டனில் (Gorton and Denton) நடைபெற்ற இடைத்தேர்தலில் பசுமைக் கட்சி அதிரடி வெற்றி பெற்றுள்ளது. கட்சித் தலைவர் (சாக் போலன்ஸ்கி) Zack Polanski இந்த வெற்றியை “நில அதிர்வு” வெற்றி என கூறியுள்ளார்.. கிரேட்டர் மான்செஸ்டர் தொகுதியின் புதிய எம்.பி.யாக 34 வயதான பிளம்பர் Hannah Spencer, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் சீர்திருத்த UK (Reform UK) இரண்டாவது இடத்தைப் பிடித்தது. தொழிற்கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. 1931 ஆம் ஆண்டு முதல் இந்தத் […]

புகைப்பட தொகுப்பு

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண செலவு இத்தனை கோடியா?

  • February 27, 2026
  • 0 Comments

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமண புகைப்படங்களை நேற்று மாலை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வெளியிட்டனர். புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. திருமண விழாவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. இருவரது தோற்றமும் ராமர்-சீதாவை நினைவுப்படுத்துகிறது. விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா […]

இலங்கை செய்தி

அச்சுவேலியில் 9 மாடுகளை கடத்தியவர் கைது!

  • February 27, 2026
  • 0 Comments

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரவாணி பகுதியில், சட்டவிரோதமான முறையில் ஒன்பது மாடுகளைக் கடத்திச் சென்ற ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் நீண்டகாலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இன்று சிறிய ரக வாகனம் ஒன்றில் ஒன்பது மாடுகளை ஏற்றிக்கொண்டு கடத்திச் சென்றபோது, காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் குற்றத் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மீட்கப்பட்ட மாடுகளுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். […]

இந்தியா

கொல்கத்தாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • February 27, 2026
  • 0 Comments

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இன்று (27) மதியம் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Richter அளவுகோலில் 5.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கொல்கத்தாவில் இம்மாதத்தில் இது போன்ற நிலநடுக்கம் ஏற்படுவது இது இரண்டாவது  முறையாகும். கடந்த 3 ஆம் திகதி இதேபோன்றதொரு நிலநடுக்கம் கொல்கத்தாவில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

உலகம் பொழுதுபோக்கு

ஜப்பான் கோவில்களில் ‘ரோபோ’ துறவி!

  • February 27, 2026
  • 0 Comments

ஜப்பானில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ‘ரோபோ’ துறவியை கியோட்டோ (Kyoto)  பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். மனிதர்களை போல இரண்டு கால்களை கொண்ட இந்த ரோபோ, கோவில்களில் மந்திரங்களை ஓதுவதுடன் மதச்சடங்குகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்த மதத்தின் மிகக் கடினமான புனித நூல்களை கூட இந்த ரோபோ கற்றுத் தேர்ந்துள்ளதுடன், எதிர்காலத்தில் மனிதத் துறவிகளுக்குப் பதிலாக இந்த AI ரோபோ துறவிகளே ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்தும் என ஆராய்ச்சியாளர்கள் […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்து வேட்டை!

  • February 27, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு( PSTA) என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மூன்றலில் இன்று (27) தபால் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்பாட்டில் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி வலியுறுத்தப்பட்டது. அத்துடன், புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் வரைவை கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டது. மக்கள் தமது கையொப்பத்தை இட்டு, […]

உலகம்

ஈரான் மற்றும் கட்டார் இடையேயான விமான சேவைகள் இடை நிறுத்தம்

  • February 27, 2026
  • 0 Comments

கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் ஈரானுக்கான தனது சில விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தும் காலத்தை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. புதிய கால அட்டவணையின்படி, மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை கட்டார் தலைநகருக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில் ஈரானுக்கான மற்ற அனைத்து Qatar Airways விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என […]

உலகம்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் ஆரம்பம்!

  • February 27, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் மீது பாகிஸ்தான் போர் தொடுப்பதாக வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் நேற்று இரவில் அதிகரித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கமைய பாகிஸ்தான் படைகள் காபூல் (Kabul), காந்தஹார் (Kandahar) மற்றும் பாக்டியா (Paktia) மாகாணங்களில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானின்  வான்வழித் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களை தலிபான்கள் முன்னெடுத்திருந்த நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது. காபூலில் வெடி சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் மேலே பறந்ததைக் […]

error: Content is protected !!