இலங்கை செய்தி

03 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய விடயங்கள் குறித்து விவாதம்!

  • February 27, 2026
  • 0 Comments

மார்ச் மாதத்துக்குரிய முதல் வார நாடாளுமன்ற அமர்வு 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதிவரை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு விவாதம் மார்ச் 04ஆம் திகதி நடைபெறும். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபை ஒத்திவைப்புவேளை மீதான […]

ஐரோப்பா

எப்ஸ்டீன் விவகாரத்தில் ரோயல் விமானப்படை தளங்கள் பயன்படுத்தப்பட்டதா?

  • February 27, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீன், ரோயல் விமானப்படை தளங்களைப் பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளை இங்கிலாந்துக்குள் கடத்தினாரா என்பதை விசாரிக்க ஏதுவாக, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான பாதுகாப்பு அமைச்சக பதிவுகளை மறுஆய்வு செய்ய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healey ) உத்தரவிட்டுள்ளார். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய எந்தவொரு விமானப் பதிவுகளையும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு வழங்குவது பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் (Gordon Brown), ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்  […]

செய்தி தமிழ்நாடு

திமுக ஆட்சியில் இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை 

  • February 27, 2026
  • 0 Comments

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை, அத்தனை குற்றவாளிகளுக்கும் புகலிடம் தருகிறது திமுக” என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சுமத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகில் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை […]

செய்தி

தமிழ்ச் செல்வன்மீது தாக்குதல்: சுரேஷ் சலேவுக்கு உளவு தகவல் கிடைத்தது எப்படி?

  • February 27, 2026
  • 0 Comments

“ சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயேதமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.” என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa. தெரிவித்தார். கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே விமல் வீரவன்ச மேற்படி தகவலை வெளியிட்டார். புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். “ அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சுரேஷ் […]

இலங்கை செய்தி

பயங்கரவாத சட்ட வரைபுக்கு எதிர்ப்பு – யாழில் மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை

  • February 27, 2026
  • 0 Comments

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை இடம்பெற்றது. நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதுடன் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு தேவையில்லை என்பதை வலியுறுத்தி அந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மக்களின் கருத்தை திரட்டி […]

ஐரோப்பா

பிரபல தீவுக்கு போதைப்பொருள் கடத்தல் : ஆசிய நாடொன்றில் பிரித்தானியர்கள் கைது!

  • February 27, 2026
  • 0 Comments

பாலி தீவுக்கு போதைப்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் இந்தோனேசிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட நிலையில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். லிட்டில்ஹாம்ப்டனைச் (Littlehampton) சேர்ந்த 29 வயதான கியால் கார்த் ராபின்சனுக்கு (Kial Garth Robinson) 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிச்செஸ்டரைச் (Chichester) சேர்ந்த 48 வயதான பிரன் எஸ்ரா வில்கின்சனுக்கு (Piran Ezra Wilkinson) ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் சுமார் £45,000 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது கூடுதலாக 190 நாட்கள் […]

இலங்கை செய்தி

யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு ஆரம்பம்

  • February 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட சைவசித்தாந்தத் துறையும், உயர் பட்டப் படிப்புகள் பீடமும் இணைந்து நடாத்தும் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு – 2026 நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கூவர் கலையரங்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி தலைமையில் சிறப்புற ஆரம்பமானது. மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மங்கல விளக்கேற்றல், நந்திக் கொடியேற்றல் […]

இந்தியா பொழுதுபோக்கு

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தாக்கல்

  • February 27, 2026
  • 0 Comments

தென்னிந்தியாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது மனைவியின் விவாகரத்து கோரல், வாக்கு வங்கியில் பின்னடைவை ஏற்படுத்துமென தமிழக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • February 27, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தி இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போது மேல் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இன்று இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றப்பத்திரிகைகள் வாசித்துக் காட்டப்பட்டன. முன்னாள் அமைச்சர்களைத் தவிர சரத் எதிரிசிங்க, அஜித் மில்ரோய், ஜயந்த கப்ரால் […]

உலகம்

இஸ்ரேலில் தங்கியிருக்கும் அமெரிக்கர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

  • February 27, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடான வளர்ந்துவரும் மோதல்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் தெஹ்ரானுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் எவ்வித தீர்வும் இன்று நிறைவுற்றுள்ள நிலையில், அமெரிக்கா மத்திய கிழக்கில் தங்களது இராணுவ தளங்களை அமைத்து வருகிறது. இதற்கிடையே ஈரானும் தாங்கல் தாக்கப்பட்டால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளது. வாஷிங்டனுக்கும் […]

error: Content is protected !!