இலங்கை செய்தி

22 நாட்களுக்குள் 2 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

  • February 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 424 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 37 ஆயிரத்து 216 பேரும், பிரிட்டனில் இருந்து 25 ஆயிரத்து 867 பேரும், ரஷ்யாவில் இருந்து 18 ஆயிரத்து 217 பேரும் இலங்கைக்கு சுற்றுலா […]

பொழுதுபோக்கு

“புருஷன்” – படபிடிப்பு ஆரம்பம்!

  • February 24, 2026
  • 0 Comments

விசால் மற்றும் தமன்னா நடிக்கும் புருஷன் படத்துக்குரிய படபிடிப்பு தொடங்கியுள்ளது. நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படங்களை வழங்குவது இயக்குநர் சுந்தர் சி க்கு கைவந்த கலை. அவரின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘புருஷன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாகும் இப்படத்தின் டீசரை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது. டீசரில், மனைவிக்கு பயந்த கணவனாக விஷாலும், கணவனை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டி எடுக்கும் மனைவியாக தமன்னாவும், மேலும் இப்படத்தில் யோகி […]

இலங்கை

திருகோணமலையில் இலவச மருத்துவ முகாம்!

  • February 24, 2026
  • 0 Comments

இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச வைத்திய முகாம் இன்று (24) திருகோணமலை 22வது படைப்பிரிவில் நடை பெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் இலவச வைத்திய முகாம் நடாத்தப்பட்டு வருகின்றது. இம்மருத்துவ முகாமில் எலும்பியல் மருத்துவ சேவை, கல் வைத்திய முகாம், பல் வைத்திய முகாம் , கண் வைத்திய பரிசோதனை போன்ற பரிசோதனைகள் இடம்பெற்றது. இந்த இலவச வைத்திய […]

இலங்கை

மருத்துவமனையின் அலட்சியத்தால் பறிப்போன உயிர் – புலம்பும் உறவினர்கள்!

  • February 24, 2026
  • 0 Comments

மினுவாங்கொடை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது சிறுமி ஒருவர், கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடை ஆதார மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாததாலும், மருத்துவரின் அலட்சியத்தாலும் அவரது மரணம் நிகழ்ந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். மினுவாங்கொடை ஜபலவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய திருமணமான பெண், கடந்த 18 ஆம் திகதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மினுவாங்கொடை ஆதார மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த […]

பொழுதுபோக்கு

சாய் பல்லவியை குறி வைத்தார் மணிரத்னம்!

  • February 24, 2026
  • 0 Comments

மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக் படமொன்றில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மணிரத்னம், “நான் சாய் பல்லவியின் ரசிகன். அவருடைய இயல்பான நடிப்பு பிடிக்கும்” என்று கூறி இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் […]

உலகம்

ஈரானை தாக்குவது ஆபத்தா? ட்ரம்ப் கூறுவது என்ன?

  • February 24, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பில் வெளியான தகவலொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump மறுத்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் General Dan Cain எச்சரித்தார் என செய்திகள் வெளியாகின. மேற்படி தகவலையே ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் […]

உலகம்

தைவானில் நிலநடுக்கம் : கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

தைவானின் வடகிழக்கு மாவட்டமான யிலான் கடற்கரையில் இன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் சிறிது நேரம் குலுங்கியதாகவும், இருப்பினும் உயிர், உடமை சேதங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலநடுக்கம் 66.8 கிமீ (41.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி மாவட்ட அரசாங்க இடத்திலிருந்து 16.9 கிமீ (10.5 மைல்) தொலைவில் இருந்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

செய்தி

மக்களின் இதயங்களில் வாழும் தலைவர்!

  • February 24, 2026
  • 0 Comments

“அமரர் ஜெயலலிதா மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.” இவ்வாறு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இந்திய பிரதமர், அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல் பிரமுகர்கள் பலரும், ஜெயலலிதாவின் தலைமைத்துவத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் […]

ஐரோப்பா

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான உறவு – பீட்டர் மண்டேல்சன் கைது!

  • February 24, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான உறவுகள் காரணமாக அமெரிக்காவிற்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) நே்ற்று கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு லண்டனில் உள்ள ஒரு முகவரியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக  லண்டன் பெருநகர காவல் படை தெரிவித்துள்ளது. தற்போது அவர் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 10 வருடங்களுக்கு முன்பு எப்ஸ்டீனுக்கு முக்கியமான அரசாங்கத் தகவல்களை அனுப்பியதாகக் மண்டேல்சன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது பாலியல் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் எதுவும் […]

அரசியல் இலங்கை செய்தி

மதத் தலைவர்களை அவமதிக்கிறது அரசு: சஜித் கொதிப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

“ நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துவரும் சூழ்நிலையில் அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கின்றது.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச Opposition Leader Sajith Premadasa குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒரு புறத்தில் அபிவிருத்தியடையும் நாட்டில் இருக்கவேண்டிய சமூக ஒழுக்கம், நாகரிகம் மற்றும் பண்பாடு நாட்டில் அழிந்துவருகின்றது. வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்து பொறுப்புகள் வகிக்கும் அமைச்சர்கள் மதத் தலைவர்களை […]

error: Content is protected !!