இலங்கை செய்தி

லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய எழுவர் கொண்ட நிபுணர் குழு நியமனம்

  • February 24, 2026
  • 0 Comments

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. 01.பேராசிரியர் டபிள்யூ.டி.ஏ.எஸ். ரொட்ரிகோ (தலைவர்) – மின் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் 02.கலாநிதி என்.ஏ.ஐ.டி. நிஸ்ஸங்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் 03.கலாநிதி ஐ.யூ. அத்தநாயக்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் […]

இலங்கை செய்தி

முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்தவுக்கு விளக்கமறியல்

  • February 24, 2026
  • 0 Comments

வெலிகம W15 ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜகத் நிஷாந்த எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெலிகம W15 ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜகத் நிஷாந்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பியபோதே கைது செய்யப்பட்டுள்ளார். 2023 […]

இலங்கை செய்தி

தென்மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு நியமனம்!

  • February 24, 2026
  • 0 Comments

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நியமித்துள்ளார். அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, 2026 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி […]

இலங்கை

நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு

  • February 24, 2026
  • 0 Comments

நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 05 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்காக அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை […]

விளையாட்டு

இந்தியாவின் அரையிறுதி கனவு கலையும் சாத்தியம்!

  • February 24, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடர்பில் சூப்பர் 8 சுற்றில் தென்னாபிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி Indian team அரையிறுதி சுற்றுக்கு semi finals முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரையிறுதிக்குரிய வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில் சிம்பாப்வே Zimbabwe அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அமோக வெற்றியை பெற வேண்டும். இந்திய அணிஇ சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு […]

உலகம்

வெனிசுலாவில் கைதிகள் விடுதலை விவகாரம் : முன்னுக்குப்பின் முரணாக வரும் தகவல்கள்!

  • February 24, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை 540 க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சட்ட உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃபோரோ பெனல் (  Foro Penal)  தெரிவித்துள்ளது. பிப்ரவரி 20 அன்று பொது மன்னிப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் 91 பேர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புதிய பொது மன்னிப்புச் சட்டம் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 2,200 பேர் விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. அரசாங்க தரப்பில் இருந்து வெளிவரும் கருத்துக்கள் மற்றும் […]

உலகம்

பிரேசிலில் கடும் மழை – 14 பேர் உயிரிழப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

தென்கிழக்கு பிரேசிலிய நகரமான ஜூயிஸ் டி ஃபோராவில் (Juiz de Fora) பெய்த கனமழை காரணமாக குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 440 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக இன்று  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பாடசாலைகளில் வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு, பொது பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பிரேசில் சீரற்ற வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை செய்தி

வவுனியாவில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு: விசாரணை தீவிரம்!

  • February 24, 2026
  • 0 Comments

வவுனியாVavuniya , ஈரற்பெரியகுளம் பகுதியில் மயானம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பது தொடர்பாக இன்று காலை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலின் ஒரு பகுதி தீயினால் எரிந்த நிலையில் காணப்படுவதுடன், […]

இலங்கை செய்தி

மூன்று புதிய தூதுவர்கள் நியமனம்: ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரம் கையளிப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

இலங்கைக்காக புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (24) முற்பகல் இதற்குரிய நிகழ்வு நடைபெற்றது. 01- கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra, 02- கத்தார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari, 03- ஸ்லோவேனியா குடியரசின் தூதுவராகTomaž Mencin ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நற்சான்றிதழ் பத்திரங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், […]

இந்தியா செய்தி

இந்தியாவில் இந்த மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் கைடக்கத்தொலைபேசி பயன்படுத்த தடை

  • February 24, 2026
  • 0 Comments

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோர் கையடக்கத்தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால், சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக உலக நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. மேலும் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்தது. இந்த நிலையில், இந்தியாவிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசு பரிசீலித்து […]

error: Content is protected !!