பொழுதுபோக்கு

‘ரஜினி 173’ – படப்பிடிப்பு ஏப்ரலில் ஆரம்பம்!

  • February 25, 2026
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஏப்ரலில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘ரஜினி173’. இதனை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சிபி சக்கரவர்த்தி. ‘ரஜினி 173’ […]

ஐரோப்பா

துருக்கியில் இராணுவ போர் விமானம் விபத்து – விமானி பலி!

  • February 25, 2026
  • 0 Comments

துருக்கியில் இராணுவ விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார். துருக்கிய விமானப்படையின் F-16 போர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கியுள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.56 மணிக்கு பாலிகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலைக்கு  அருகே இடம்பெற்றது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேற்படி விபத்தில் விமானி உயிரிழந்ததை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலேர் (Yasar […]

இலங்கை செய்தி

கச்சதீவு திருவிழாவில் 3,996 தமிழக யாத்திரிகள் பங்கேற்பு!

  • February 25, 2026
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, நாளைமறுதினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்பதற்காகவே தமிழகத்திலிருந்து பெருமளவிலான பக்தர்கள் கடல் வழியாக வருகை தருகின்றனர். இம்முறை தமிழகத்திலிருந்து மொத்தம் 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் வருகை தரவுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 92 விசைப்படகுகளில் 3 […]

அரசியல் இலங்கை செய்தி

புலிகளின் சித்தாந்தம் சர்வதேசத்தில் தோற்கடிக்கப்படவில்லை: புலம்புகிறது மஹிந்த அணி!

  • February 25, 2026
  • 0 Comments

“இலங்கையில் புலி பயங்கரவாதம் பௌதீக ரீதியாக அழித்தொழிக்கப்பட்டாலும்  அதன் பின்னணியிலுள்ள சித்தாந்தம் சர்வதேச ரீதியில் இன்னும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சீவ எதிரிமான்ன Sanjeeva Edirimanna தெரிவித்த்தார். நாமல் ராஜபக்ச லண்டனில் முன்னெடுக்கப்படவிருந்த கலந்துரையாடல்கள் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “உலகின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்களில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்சவுக்கு  உத்தியோகபூர்வ அழைப்பு […]

உலகம்

பொம்மையிடம் தாயன்பை தேடிய குரங்கு : சரணாலயங்களை விமர்சிக்கும் PETA!

  • February 25, 2026
  • 0 Comments

இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் தாயால் கைவிடப்பட்ட பஞ்ச் என்ற குரங்கு,  ஒராங்குட்டான் பொம்மையிடம் தாய் அன்பை தேடி அந்த பொம்மையோடு வலம் வரும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் விலங்கு உரிமைகள் குழுவான PETA, இது “விலங்கியல் பூங்காக்களின் கொடுமைக்கு” சான்றாகும் என விமர்சித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் பிறந்த உடனேயே அவரது தாயால் நிராகரிக்கப்பட்ட பஞ்ச், மிருகக்காட்சிசாலை ஊழியர்களால் வளர்க்கப்பட்ட நிலையில் ஏனைய குரங்குகளுடன் இணைவதற்காக விடப்பட்டது. இருப்பினும் ஏனைய குரங்குகள் அதனை […]

விளையாட்டு

இந்தியா – ஸிம்பாப்வே மோதலில் இசை விருந்து!

  • February 25, 2026
  • 0 Comments

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ‘சுப்பர் 8’ சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (26) நடைபெறவுள்ள இந்திய மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, அனிருத்தின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. தனது துள்ளலான இசையால் ரசிகர்களைக் கட்டிப்போடும் அனிருத், கிரிக்கெட் மைதானத்தில் ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை நிகழ்த்தவுள்ளார். குறிப்பாக, சேப்பாக்கம் மைதானத்தில் குறித்த நிகழ்வு நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

ஐரோப்பா முக்கிய செய்திகள்

இங்கிலாந்தில் வெள்ளத்தில் மூழ்கும் 08 இலட்சம் வீடுகள் : காத்திருக்கும் நெருக்கடி!

  • February 25, 2026
  • 0 Comments

2080 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து முழுவதும் 866,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என ஆய்வொன்று எச்சரித்துள்ளது. கிரீன்பீஸிற்கான ஜியோஸ்மார்ட் நடத்திய புதிய பகுப்பாய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.  இந்த கணிப்பு, தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட உலக வெப்பநிலை 2.4C அதிகரிப்பதை எடுத்துரைக்கிறது. ஆய்வின்படி, ஸ்காட்லாந்து அதிக ஆபத்தில் உள்ள பிராந்தியமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  386,716 வீடுகள் ‘அதிக’ அல்லது ‘மிக அதிக’ வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து முழுவதும் சமீபத்திய பரவலான வெள்ளம் […]

இலங்கை செய்தி

சுரேஷ் சலே 3 நாட்கள் தடுப்பு காவலில்!

  • February 25, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே Suresh Sallay பயங்கரவா தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (25) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே மேற்படி தகவல் வெளியிட்டப்பட்டது. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஜீவ மெடவத்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மேற்படி ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். […]

இலங்கை செய்தி

இலங்கை, ரஷ்யா உறவை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு!

  • February 25, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan, இன்று (25) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளையும் பாதிக்கும் பொதுவான விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன. மேலும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் […]

இந்தியா

“இஸ்ரேல் நாடாளுமன்றில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர்”

  • February 25, 2026
  • 0 Comments

இந்திய India  பிரதமர் நரேந்திர மோடி Narendra Modi இரு நாள் அரசமுறைப் பயணமாக இன்று (25) இஸ்ரேல் பயணமானார். இஸ்ரேல் Israel நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார். இதன்மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெருகின்றார். தனது இஸ்ரேல் பயணத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எனது அன்பு நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பயணம் மேற்கொள்கின்றேன். சமீபத்திய […]

error: Content is protected !!