உலகம்

அமெரிக்க படகு மீது கியூபா படையினர் துப்பாக்கிச் சூடு : நால்வர் பலி

  • February 26, 2026
  • 0 Comments

கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது அந்நாட்டு கரையோர பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படகில் இருந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் மேலும் 06 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் Marco Rubio கருத்துத் தெரிவிக்கையில், படகில் இருந்த நபர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்தின் புன்புலம் சிங்களக் குடியேற்றம்: அமைச்சர் மறுப்பு!

  • February 26, 2026
  • 0 Comments

“கிவுல் ஓயா திட்டத்தின் பின்னணி சிங்களக் குடியேற்றமல்ல.” – என்று Minister Ramalingam Chandrasekhar தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். “கிவுல் ஓயா திட்டத்தை வைத்து பல்வேறு விதமான கருத்துகள் பரப்பப்படுகின்றன. சிங்களக் குடியேற்றத்தை நோக்கமாகக் கொண்டு கிவுல் ஓயா திட்டம் அமைக்கப்படவில்லை. மாறாக, விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவே அந்தத் திட்டம் கொண்டுவரப்படுகின்றது. அங்கு குடியேற்றங்களை மேற்கொண்டால் தமிழ்க் குடியேற்றங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். கடந்த அரசுகளில் […]

இலங்கை உலகம்

நோர்வே நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து விவாதம்

  • February 26, 2026
  • 0 Comments

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைவாக இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இதன்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

பிளவுப்பட்டிருந்த உறவில் முன்னேற்றம் : சீனாவுடனான உறவு தொடர்பில் ரூபியோ கருத்து!

  • February 26, 2026
  • 0 Comments

அமெரிக்காவும் சீனாவும் நீண்டகாலமாக பிளவுப்பட்டிருந்த உறவில் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியதை தொடர்ந்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உறவில் குறைந்தபட்சம் ஒரு வகையான மூலோபாய ஸ்திரத்தன்மையை நாம் அடைந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக போர் இரு தரப்பினருக்கும் உலகிற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று இரு நாடுகளும் புரிந்துக்கொண்டுள்ளதாகவும் அவர் […]

இலங்கை செய்தி

சுரேஷ் சலே கைது: கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

  • February 26, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுப் பிரிவின் State Intelligence Service முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே Suresh Sallay கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை , கைது நடவடிக்கையை வரவேற்றுள்ளது. […]

ஐரோப்பா

அமெரிக்காவின் சமகால போக்கு : அணுசக்தி கோட்பாட்டை புதுப்பிக்கும் முயற்சியில் பிரான்ஸ்!

  • February 26, 2026
  • 0 Comments

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ( Emmanuel Macron) நாட்டின் அணுசக்தி கோட்பாட்டை புதுப்பிக்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சும் பிரிட்டனும் அணுசக்தி சக்திகளாக இருந்தாலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் எந்தவொரு சாத்தியமான எதிரிகளையும் தடுப்பதற்கு முதன்மையாக அமெரிக்காவையே நம்பியுள்ளன. இருப்பினும் உக்ரைன் போரில் ரஷ்யாவுடன் ட்ரம்ப் கொண்டுள்ள நல்லிணக்கம் மற்றும் நேட்டோ நட்பு நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தல்கள் உட்பட பல உலகளாவிய விடயங்கள் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு சூழலை ஆட்டங்கான வைத்துள்ளது. […]

இலங்கை செய்தி

கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் தீ பரவல்

  • February 26, 2026
  • 0 Comments

வத்தளை, கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

செய்தி

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்: இஸ்ரேல் நாடாளுமன்றில் மோடி வலியுறுத்து!

  • February 26, 2026
  • 0 Comments

” தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. இது விடயத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிக்கும்.’’ இந்திய பிரதமர் மோடி Narendra Modi திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ தீவிரவாதத்தை நியாயப்படுத்தவே முடியாது. ஒக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உங்கள் வேதனையை உணர்கிறேன். மும்பை தீவிரவாத தாக்குதலும், இஸ்ரேலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலும் ஒன்றுதான். பொதுமக்களை கொல்வதை நியாப்படுத்த […]

இலங்கை செய்தி

“புலிகளை தோற்கடிக்க பங்களிப்பு வழங்கியவரே சுரேஷ் சலே”

  • February 26, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி கூறிய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில Udaya Gammanpila தெரிவித்தார். “புலிகளை தோற்கடிப்பதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய படைவீரர்தான் சுரேஷ் சலே. எனவே, அவரை பழிவாங்க வேண்டும் என்ற தேவைப்பாடு பிரிவினைவாத சக்திகளுக்கு இருந்தது. சனல் 04 ஊடகத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக […]

விளையாட்டு

மே.தீவுகள், தென்னாபிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை!

  • February 26, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் இன்று (26) நடைபெறும் போட்டியில் தென்னாபிரிக்கா South Africa மற்றும் மேற்கிந்திய தீவுகள் West Indies அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் Ahmedabad இன்று மாலை 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்படும். சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளுமே தாம் எதிர்கொண்ட முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. தென்னாபிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தியது. மேற்கிந்திய தீவுகளிடம் சிம்பாப்வே அணி மண்டியிட்டது.

error: Content is protected !!