செய்தி விளையாட்டு

ஒருநாள் தொடர் – இந்திய அணிக்கு இலகுவான வெற்றி இலக்கு

  • January 14, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நிரஞ்சன் ஷா(Niranjan Shah) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில், சுப்மன் கில்(Shubman […]

உலகம் முக்கிய செய்திகள்

‘கோல்டன் டோம்’ (Golden Dome) ஏவுகணை அமைப்பை உருவாக்க கிரீன்லாந்து தேவை – ட்ரம்ப்!

  • January 14, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து, டென்மார்க் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ‘கோல்டன் டோம்’  (‘Golden Dome) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கு கிரீன்லாந்து முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பங்களிப்பு இல்லையென்றால் நேட்டா கூட்டணி பலம் மிக்கதாக இருக்காது எனவும் அவர் விமர்சித்துள்ளார். ஆகவே கிரீன்லாந்தை அமெரிக்கா பெறுவதற்கான முயற்சியை நேட்டோ வழிநடத்த வேண்டும் என்றும்  பரிந்துரைத்துள்ளார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

25 வருட கால வரலாற்றில் முதல் முறையாக மருத்துவ வெளியேற்றம் குறித்து அறிவித்த நாசா!

  • January 14, 2026
  • 0 Comments

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து நான்கு  உறுப்பினர்கள் மருத்துவ வெளியேற்றத்திற்கு தயாராகி வருவதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளி வீரர் ஒருவர் வெளியிடப்படாத உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், இதன்காரணமாக குழுவினர் வெளியேறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-11  (Nasa’s SpaceX Crew-11)  டிராகன் காப்ஸ்யூல் (Dragon capsule) மூலம் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மருத்துவ தனியுரிமையை மேற்கோள் காட்டி, எந்த குழு உறுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த கூடுதல் விவரங்களை நாசா விண்வெளி நிறுவனம் […]

இந்தியா

“ உடன் வெளியேறுக” ஈரானிலுள்ள இந்தியர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுப்பு!

  • January 14, 2026
  • 0 Comments

ஈரானில் வன்முறை தலைவிரித்தாடும் நிலையில், அங்கிருந்து உடன் வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தால் இது தொடர்பில் விசேட அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஈரானில் வசிக்கும் இந்தியர்கள், கிடைக்கக் கூடிய போக்குவரத்தைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது. ஈரானில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக் கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளனர். ஈரானில் மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் […]

ஐரோப்பா

சிறை கைதிகள் விடுதலை விவகாரம் : வெளிப்படை தன்மையின்றி செயற்படும் வெனிசுலா!

  • January 14, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் தேசிய சட்டமன்றத் தலைவர், ‘அமைதியைத் தேடுவதற்கான’ ஒரு அடையாளமாக  கணிசமான கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என முன்னதாக தெரிவித்திருந்தார். இதற்கமைய மனித உரிமைகள் குழுவான ஃபோரோ பெனல் (Foro Penal) 56 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. இருப்பினும் வெனிசுலாவின் அரசாங்கம் ஆதாரங்களை முன்வைக்காமல் 400 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது அரசாங்கத்தின் வெளிப்படை தன்மை குறித்த சர்ச்சையை […]

இலங்கை ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இலங்கைப் பெண் குத்திக்கொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் கணவன்

  • January 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கார்டிப் (Cardiff) நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த பயங்கரமான கொலைச் சம்பவத்தில், 37 வயதான இலங்கைப் பின்னணியைக் கொண்ட திஸார வேரகலாகே (Thisara Weragalage) தனது முன்னாள் மனைவியைக் கொலை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். 32 வயதான நிரோதா நிவுன்ஹெல்லா (Nirodha Niwunhella), கடந்த ஆகஸ்ட் 21 அன்று கார்டிப்பின் ரிவர்சைடு பகுதியில் இரண்டு கார்களுக்கு இடையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்தக் கொலையை மறுத்து வந்த திஸார, நேற்று […]

இலங்கை செய்தி

வடக்கு மண்ணில் தைப்பொங்கலை கொண்டாடும் ஜனாதிபதி அநுர!

  • January 14, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake தைப்பொங்கல் தினத்தன்று வடக்குக்கு பயணம் மேற்கொள்கின்றார். இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ். வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு வட மாகாண தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பார். அத்துடன், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் […]

ஐரோப்பா

டிக்கெட் விலைகளை உயர்த்திய லூவ்ரே அருங்காட்சியகம் – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

  • January 14, 2026
  • 0 Comments

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியகம் (Louvre Museum) சர்வதேச பார்வையாளர்களுக்கான நுழைவு விலைகளை கணிசமாக அதிகரித்துள்ளது.  இதற்கமைய இரண்டு அடுக்கு டிக்கெட் முறையை செயல்படுத்தி வருகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பெரும்பாலான குடிமக்கள் 32 யூரோக்கள் (£27) செலுத்துவார்கள். இது முந்தைய விலைகளுடன் ஒப்பிடும்போது 45 சதவீதம் அதிகமாகும். வேலைநிறுத்தங்கள், கூட்ட நெரிசல் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய புதுப்பித்தல்கள் மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

“கோ ஹோம் ஹரிணி” என கோஷம் எழுப்பிவிட்டு வெத்து வேட்டாக வீடு திரும்பிய விமல்!

  • January 14, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவந்த சத்தியாகிரகப் போராட்டத்தை விமல் வீரவன்ச Wimal Weerawansa முடிவுக்கு கொண்டுவந்திருந்தாலும், அது தொடர்பில் அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்படுகின்றது. தமது போராட்டம் வெற்றியளித்துவிட்டது என விமல் வீரவன்ச அறிவிப்பு விடுத்தாலும், இது விடயத்தில் வெற்றியென கேள்வி எழுப்படுகின்றது. கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya விலக வேண்டும் என்பதே விமல் வீரவன்சவின் பிரதான கோரிக்கைகளாக இருந்தன. இவை நடக்கும்வரை தனது […]

ஆஸ்திரேலியா செய்தி

வேகமாகப் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ்

  • January 14, 2026
  • 0 Comments

அவுஸ்ரேலியாவின் தெற்கு நியூ சவுத் வேல்ஸின் (NSW) ரிவரினா பகுதியில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) வைரஸ் பரவும் அபாயம் குறித்து சுகாதார அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சென்டினல் கோழிகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, கொசுக்களால் பரவும் இந்த நோயானது கடுமையான தலைவலி, வலிப்பு மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறிப்பிட்ட சிகிச்சை இல்லை என்றாலும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. […]

error: Content is protected !!